நான்கு வழிச்சாலை மேம்பாட்டு பணி அதிகாரிகள் ஆய்வு

தாராபுரம் ஈரோடு நான்கு வழிச்சாலை மேம்பாட்டு பணி அதிகாரிகள் ஆய்வு;

Update: 2025-05-26 15:24 GMT
தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இருவழித்தடத்தில் இருந்து நான்கு வழித் தடமாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலையான ஈரோடு-தாராபுரம் சாலையில் 4 கி.மீ நீளத்திற்கு (நொச்சிப்பாளையம் முதல் மாந்தோப்பு வரை) இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் ரூ.26 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் மு.கிருஷ்ணமூர்த்தி தரக்கட்டுப்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News