தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளகோவிலில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்;
வெள்ளகோவிலில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் வெள்ளகோவில் நகர செயலாளர் பொறியாளர் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஸ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 15 பேர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். மேலும் இப்பகுதி அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற நான்கு மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வெள்ளகோவில் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் பொதுமக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகர பொருளாளர் ராஜசேகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.