ராயக்கோட்டை: நின்ற லாரி மீது டூவீலர் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.
ராயக்கோட்டை: நின்ற லாரி மீது டூவீலர் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள எச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி, டிரைவர். இவரது மகன் கவிமணி (19) நேற்று இவர் டூவீலரில் எச் சம்பட்டியில் இருந்து ராயக்கோட்டைக்கு சென்றார். அப்போது புருசப்பன் கோவில் அருகில் உள்ள ஒரு கடை முன்பு நின்ற லாரி மீது நிலை தடுமாறி டூவீலர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கவிமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.