சூளகிரி அருகே மரத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை.
சூளகிரி அருகே மரத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள துப்புகானப்பள்ளி அடுத்த கழஞ்சூரை சேர்ந்தவர் எல்லப்பா (75). இவர் உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 24-ம் தேதி அன்று அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.