கார் மோதி கட்டிடத் தொழிலாளி பலி
வெள்ளக்கோவில இருக்கு கார் மோதியதில் கட்டிடத் தொழிலாளி மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார் விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
வெள்ளகோவில் வேலகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). கட்டிட தொழிலாளி. இவர் வெள்ளகோவில் காங்கேயம் தேசிய நெடுஞ்சாலையில் வேலகவுண்டன் பாளையம் பிரிவு ஆட்டோ கியாஸ் பங்க் அருகில் சாலையை முருகேசன் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம், சப் -இன்ஸ்பெக்டர் எம்.சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.