டூவீலர் மீது பேருந்து மோதியதில் இருவர் பலி

மதுரை திருமங்கலம் அருகே நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்;

Update: 2025-05-27 02:30 GMT
மதுரை மாவட்டம், பாப்பநாயக்கன்பட்டி முனியாண்டி மகன் கார்த்திக், (22) மற்றும் நமச்சிவாயம் மகன் ஹேமந்தராஜ்,(18)கூலி தொழிலாளிகளாக உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு (மே.25)11மணிக்கு டி.கல்லுப்பட்டிக்கு உணவு வாங்க இருசக்கர வாகனத்தில் திருமங்கலம்- - ராஜபாளையம் ரோட்டில் சோலைப்பட்டி விலக்கு அருகே வந்த போது, செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இருசக்கரத்தின் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார், தென்காசியைச் சேர்ந்த டிரைவர் குழந்தை யேசு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News