சங்கரன்கோவிலில் நியாய விலை கடையின் ஊழியருக்கு அடி உதை

நியாய விலை கடையின் ஊழியருக்கு அடி உதை;

Update: 2025-05-27 03:08 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதியார் நான்காம் தெருவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அமுதம் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இங்கு பாலமுருகன் என்பவர் எடையாளராக கடந்த ஒன்றரை வருடமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நியாய விலை கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்களிடம் எடையாளர் பாலமுருகன் நாட்களாக சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிப்படைந்த பெண்கள் உறவினர்களும் கூறியதால் இன்று கடை முன்பு திரண்ட உறவினர்கள் பாலமுருகனிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பாலமுருகனை கடுமையாக தாக்கினர் இதனை எடுத்து கடைவிற்பனையாளர் சங்கரன் மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். பிரச்சனை விஸ்வரூபம் எடுப்பது அறிந்த பாலமுருகன் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது நியாய விலை கடையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த சம்பவத்தில் எடையாளர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News