கோவை: வரி உயர்வை ரத்து செய்ய வேலுமணி வலியுறுத்தல் !

கோவை மாவட்டத்தில் அடிப்படை வசதி திட்டங்களை நிறைவேற்றுவது மற்றும் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரிகளைக் குறைக்க வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.;

Update: 2025-05-27 05:58 GMT
கோவை மாவட்டத்தில் அடிப்படை வசதி திட்டங்களை நிறைவேற்றுவது மற்றும் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரிகளைக் குறைக்க வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி கூறியதாவது, கோவை மாநகராட்சியில் வரி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவை குறைக்கப்பட வேண்டும். மீண்டும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு, குப்பை வரி மற்றும் அபராத வரி போன்ற வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும். கோவையில் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Similar News