கோவை: உடைந்த பால் பாக்கெட்டுகள், பெட்டிகளால் பெரும் நஷ்டம்

கோவை மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் செய்யும் முகவர்கள், தங்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பெட்டிகள் உடைந்த நிலையில் இருப்பதாலும், பால் பாக்கெட்டுகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாலும் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.;

Update: 2025-05-27 06:20 GMT
கோவை மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் செய்யும் முகவர்கள், தங்களுக்கு விநியோகிக்கப்படும் பால் பெட்டிகள் உடைந்த நிலையில் இருப்பதாலும், பால் பாக்கெட்டுகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாலும் கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் ஆவின் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஆவின் மேலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், முகவர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். கடந்த வாரம் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கோவையில் ஆய்வு மேற்கொண்டபோதிலும், அதன் மூலம் எவ்வித பலனும் இல்லை எனப் பொதுமக்களும் முகவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய நிலை நீடித்தால் பால் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும், பொதுமக்கள் தரமான பால் பெறுவதில் சிரமப்படுவார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, கோவை ஆவின் நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பால் பெட்டிகள் மற்றும் பால் பாக்கெட்டுகளின் தரத்தை மேம்படுத்தி, முகவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனப் பொதுமக்களும் முகவர்களும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News