கெலவரப்பள்ளி: காற்றில் பறக்கும் ரசாயன நுரையால் மக்கள் அவதி.
கெலவரப்பள்ளி: காற்றில் பறக்கும் ரசாயன நுரையால் மக்கள் அவதி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து வரும் நிலையில் அணை பகுதியில் பலத்த காற்று வீசுவதால் ஆற்றில் உருவாகும் ரசாயன நுரைகள் சுற்றுப்புறங்களில் பறந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரசாயன நுரைகள் கண்கள், உடல் மீது பட்டால் கடும் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, தோல் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.