அரசு மரியாதையுடன் காவலர் உடல் நல்லடக்கம்.

மதுரை மதுரை அருகே விபத்தில் இறந்த காவலரின் உடல் நேற்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது;

Update: 2025-05-27 08:35 GMT
மதுரையில் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகன விபத்தில் இயற்கை எய்திய D3 கூடல்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் கணபதி அவர்களின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை ) ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அவரது உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று (மே.26) நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திார்கள்.

Similar News