ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமா பந்தியில் கோவலத்துடன் மனு அளித்தவரால் பரபரப்பு
ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கோவணத்துடன் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.;
ஜெயங்கொண்டம், மே.28 - ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் அரை நிர்வாணத்துடன் மனு அளித்த வாலிபர் -எனது பாட்டனர் கோவணத்துடன் சம்பாதித்த சோத்தை தனது பெயருக்கு மாற்ற அரை நிர்வாணத்துடன் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தது அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டம் கல்லாத்தூர் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் சுரேஷ் (35)) இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீட்டு மனையில் அளவீடு குறைவாக உள்ளதாக கூறி மீண்டும் அளவீடு செய்து தர வேண்டும் என உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் மனு அளித்தார். இதில் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இந்நிலையில் தனது மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடையார்பாளையம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அரை நிர்வாணத்துடன் வந்து சுரேஷ் மனு அளித்தது அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சுரேஷ் கூறும் போது 2021 ஆம் ஆண்டு வீட்டு மனை அளவீட்டில் குறைவாக உள்ளதாக கூறி மறு அளவீடு செய்து தர வேண்டும் என மனு அளித்தேன் எவ்வித நடவடிக்கையும் இல்லை இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மற்றொரு இடத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டி மனு அளித்த போது அப்போது மண்டல துணை வட்டாட்சியராக இருந்த சரவணன் லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்த நிலையில் அவர் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். இதை காரணமாக வைத்து வட்ட சார்பதிவாளர் எனது மனுவின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை வட்ட சார் பதிவாளர் மீது பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவே எனது பாட்டனார் கோவணத்துடன் சம்பாதித்த சொத்தை எனது பெயருக்கு மாற்ற அரை நிர்வாணத்துடன் (கோவணத்துடன்) மனு அளிக்க வந்துள்ளேன் எனது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.