அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு படத்துக்கு மரியாதை

அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு படத்துக்கு மரியாதை செலுத்தினர்.;

Update: 2025-05-27 12:00 GMT
அரியலூர், மே 27- மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நினைவு நாளையொட்டி அரியலூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, கட்சி நிர்வாகிகள் மலர் தூவி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினர். அக்கட்சியின் நகரத் தலைவர் மா.மு.சிவக்குமார், வட்டாரத் தலைவர் கர்ணன், மாவட்ட செயலர் ரவிச்சந்திரன், நகரச் செயலர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரு படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, நவீன இந்தியாவை உருவாக்கியவர் நேரு என்று கூறி அவரது சாதனைகளை எடுத்துரைத்தனர்.

Similar News