போக்குவரத்து தலைமையகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
மதுரை போக்குவரத்து தலைமையகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது உள்ள;
மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோட்டில் உள்ள போக்குவரத்து தலைமையகம் முன்பாக இன்று (மே.27) மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைந்து பேசி முடிக்க கோரியும் முழுமையான அரியர் தொகை வழங்க கோரியும் 1/4/2003 க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரியும் பணி ஓய்வு பெறும் நாளிலே அனைத்து பண பலன்களை வழங்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தப்மட்டது. இதில் ஏராளமான போக்குவரத்து பணியாளர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.