மருமகளுடன் சென்ற மாமியார் விபத்தில் பலி

மதுரை திருமங்கலம் அருகே மருமகளுடன் சென்ற மாமியார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.;

Update: 2025-05-27 12:27 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராசர் புரத்தைச்சேர்ந்த மகேஷ்குமார் மனைவி சுகன்யா (28) என்பவர் திருமங்கலம் மதுரை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்னால் மாமியார் கனகபூசனம் அமர்ந்து சென் றார்.அப்போது வாகனத் தின் கட்டுப்பாட்டை இழந்து தவறி இருவரும் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த கனகபூசனத்தை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News