சேத்துப்பட்டு அருகே நெடுஞ்சாலை துறை இடத்தில் இருந்த வீட்டை பொக்லைன் மூலம் அகற்றம்.
சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டியிருந் விவசாயி வீட்டை பொக்லைன் மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் செவ்வாய்கிழமை அகற்றினர்.;
ஆரணி, சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டியிருந் விவசாயி வீட்டை பொக்லைன் மூலம் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் விவசாயி ஆவார். . இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் போளூர் ரோடு அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக குடிசை விட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாராயணனை அங்கிருந்து காலி செய்து வேறு இடத்திற்கு செல்லுமாறு பல முறை அறிவுறுத்தினர். மேலும், 2 ஆண்டுகளாக அவருக்கு நெடுஞ்சாலை துறை அலுவலகம் மூலம் காலி செய்ய கடிதங்களும் அனுப்பபட்டது. ஆனால் நாராயணன் காலி செய்யவில்லை. இந்நிலையில் நெடுஞ்சாலை துறை போளூர் உதவி கோட்ட பொறியாளர் அந்தோனிதாஸ், பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நாராயணன் வீட்டிற்கு சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் 25 போலீசார் பாதுகாப்புடன் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் நாராயணன் வீட்டை அகற்றினர். அப்போது நாராயணன் குடும்பத்தினர் கதறி அழுதனர். தொடர்ந்து, அவர்களை போலீசார் சேத்துப்பட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று பின்னர் அகற்றபட்ட வீட்டின் அருகே கொண்டு சென்று விட்டனர். அப்போது உடன் துணை வட்டாட்சியர் காஜா, நிலஅளவையர் காந்திமதி, தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்க்ள, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்பாபு உள்பட பலர் இருந்தனர்.