ஆரணியில் பணிச்சுமை காரணமாக அரசுப்பணிமனையில் அரசுப்பேருந்து ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

ஆரணி அரசுப்பணிமனையில் பணிச்சுமை காரணமாக அரசுப்பேருந்து ஓட்டுநர் காலை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.;

Update: 2025-05-28 05:48 GMT
ஆரணி அரசுப்பணிமனையில் பணிச்சுமை காரணமாக அரசுப்பேருந்து ஓட்டுநர் காலை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பாலாஜி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆரணி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவருக்கு விடுமுறை அளிக்காமல் தொடர்ந்து தினமும் பேருந்தை இயக்க கூறியுள்ளனர். இது குறித்து ஓட்டுநர் பாலாஜி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டிய ஓட்டுநர் பாலாஜி செவ்வாய்கிழமை காலை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அரசுப்பணிமனையில் இருந்து அனைவரும் ஓடிச்சென்று பாலாஜியை மீட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி சமரசம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News