வேப்பனப்பள்ளியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி.
வேப்பனப்பள்ளியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியை சேர்ந்தவர் வினோத் (35). லாரி டிரைவரான இவர் தனது உறவினர் வேலுவுடன் (30) நேற்று ஆந்திர மாநிலம் குப்பத்திலிருந்து வேப்பனப்பள்ளி வழியாக லாரியில் சுமை ஏற்றிக் கொண்டு வந்தனர். சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பியை உயர்த்தி பிடித்து லாரி செல்ல வேலு உதவியுள்ளார். அப்போது வேலு மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வேப்பனப்பள்ளி போலீசார் உடலை மீட்டு இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.