சோலைமலை முருகன் கோவில் வைகாசி உற்சவ விழா அறிவிப்பு

மதுரை அழகர் கோயில் சோலை முருகன் கோவிலில் வைகாசி உற்சவ திருவிழா வரும் 31ஆம் தேதி தொடங்குகிறது.;

Update: 2025-05-28 09:54 GMT
மதுரை அருகே அழகர்கோவில் மலைமேல் அமைந்துள்ள சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா வருகின்ற மே 31ம் தேதி தொடங்கி ஜூன் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் மே 31ம் தேதி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் , தீபாராதனைகள் நடைபெறும். பின்னர் காலை 10 மணிக்கு மேல் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. பின்னர் 11 மணிக்கு மேல் சண்முகர் அர்ச்சனை, மகா தீபாராதனை மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. திருவிழா தொடங்கிய நாள் முதல் ஜூன் 9ம் தேதி வரை சுவாமி புறப்பாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News