நிதி நிறுவன மேலாளர் விஷம் குடித்து தற்கொலை.

மதுரை உசிலம்பட்டி அருகே கம்மாக்கரையில் நிதி நிறுவன மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.;

Update: 2025-05-28 10:41 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கொடிக்குளம் பகுதியில் வசிக்கும் திருப்பதி மகன் நவநீதகிருஷ்ணன் (29) என்பவர் திருமணமானவர். இவர் எல் அண்ட் டி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில் செல்லம்பட்டி பிராஞ்சிலிருந்து எழுமலை பிராஞ்சுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் (மே.26) மாலையில் கருமாத்தூரில் இருந்து விக்ரமங்கலம் செல்லும் கண்ணாபுரம் பெத்தண்ணகுளம் கண்மாய் கரையில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உசிலம்பட்டி மருத்துவமனை கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இது குறித்து அவரது மனைவி யுவலட்சுமி செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்‌. போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News