ஊத்தங்கரை: திருடிய நபர்களின் சிசிடிவி வெளியீடு
ஊத்தங்கரை: திருடிய நபர்களின் சிசிடிவி வெளியீடு;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி காமராஜர் சாலையில் கடந்த மே 26-ஆம் தேதி மளிகை கடையில், இரவு மேற்கூரை உடைத்து திருடிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் மளிகை கடையில் திருடிய 4-ங்கு நபர்கள், எந்தவித பதற்றம் இன்றி திருட்டில் ஈடுபட்டு சாவகாசமாக நடந்து சென்ற வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பாகியுள்ளது. கல்லாவி போலீசார் வீடியோவை கைப்பற்றி திருடர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.