பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை

மதுரை மாவட்டம் அலங்காநல்ல அருகே இளம்பெண் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது;

Update: 2025-05-28 12:20 GMT
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஐயப்பன் நகர் காயம்பட்டியில் வசிக்கும் ராஜபாண்டி மகள் ஹர்ஷினி பாண்டி(20 )என்பவர் கடந்த 26 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்ட காரணத்தால் வலி பொறுக்க முடியாமல் பூச்சி மருந்தினை உட்கொண்டு வீட்டில் மயங்கி கிடந்திருந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இது குறித்து அவரது தந்தை ராஜ் பாண்டி அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணத்தை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News