இரண்டு டூவீலர்கள் மோதியதில் டிரைவர் படுகாயம், ஒருவர் கைது

குமாரபாளையத்தில் இரு டூவீலர்கள் மோதியதில் டிரைவர் படுகயாமடைந்தார். விபத்துக்கு காரணமானவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-05-28 15:02 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல், 38. டிரைவர். இவர் நேற்றுமுன்தினம் இரவு 10:00 மணியளவில், அம்மன் நகர் ஐயப்பன் கோவில் சர்வீஸ் சாலை பகுதியில் தனது யமஹா கிரக்ஸ் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் டி.வி.எஸ். எக்ஸல் சூப்பர் வாகனத்தில் வந்த கூலி தொழிலாளி , ரத்தினவேல் வண்டி மீது மோதியதில், ரத்தினவேல் பலத்த காயமடைந்தார். இவரை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான டி.வி.எஸ். எக்ஸல் சூப்பர் வாகனத்தின் ஓட்டுனர் நாராயண நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சண்முகமணி, 55, என்பவரை கைது செய்தனர்.

Similar News