ஆண்டிமடம் -சூரப்பள்ளம் தார் சாலை பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை போடாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி.
ஆண்டிமடம் -சூரப்பள்ளம் தார் சாலை பணிக்காக சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை போடாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதால் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரியலூர், மே.29- ஆண்டிமடம் -சூரப்பள்ளம் வழியாக தென்னூர் சாலை பணிகள் நடைபெற்று வரும் சூழலில் தற்பொழுது ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு நீண்ட நாட்களாகியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ஒரு கால அடிப்படையில் சாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் ஆண்டிமடம் முதல் சூரப்பள்ளம் வழியாக தென்னூர் வரை. (ரெட்டிதத்தூர் சூரப்பள்ளம் விளந்தை தென்னூர் சாலை.) சாலை பணி பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 1500 கிலோ மீட்டர் தொலைவு சாலை பணி ஆரம்பித்து 6 மாத காலம் ஆகியும் வேலை இதுவரை முடிக்கவில்லை. சாலையில் ஜல்லியை கொட்டி வாகனம் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.. மேலும் அவ்வழியாக வரும் முதியவர்கள் சைக்கிளில் சென்று கீழே விழுந்து முட்டி உடைந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் 2 சக்கர வாகனங்கள் பஞ்சர் ஆகி விடுவதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு செல்லும் சம்பவம் நடந்துள்ளது. எனவே சாலையை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மேலும் அது சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் மாவட்ட நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்த வேண்டுமென பாதசாரிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.