ஜெயங்கொண்டம் பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட பொது தொழிலாளர் சங்க இரண்டாவது பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஜெயங்கொண்டம் பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட பொது தொழிலாளர் சங்க இரண்டாவது பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
அரியலூர், மே.29- அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க 2-வது மாவட்ட பேரவை கூட்டம் ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் தனியார் கூட்டரங்கில் சி ஐ டி யு மாவட்ட தலைவர் ஆர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு கே.கவிதா, எஸ்.நூற்பாரு, எஸ்.சண்முகசுந்தரம், பி.அமுதா, என்.செல்வராசு, எஸ் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். .கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மாவட்ட செயலாளர் பி.துரைசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.சிற்றம்பலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கட்டுமான நல வாரியத்தில் வழங்கும் சலுகைகளை அமைப்பு சாரா நல வாரியத்திலும் வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பென்ஷன் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், பெண் தொழிலாளருக்கு 50 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும், ஜெயங்கொண்டம் பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும், தேளூர் கொள்முதல் நிலையத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்வரை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, குண்டு குழியுமான ரோட்டை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், தரைக்கடை வெண்டர் கமிட்டியை கூட்டி அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுக்க வேண்டும், அனைத்து நெசவாளர்களுக்கும் 300 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு மாவட்ட பொருளாளர் கே.கண்ணன், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் வி.சேப்பெருமாள், பொது தொழிலாளர் சங்க செயலாளர் எஸ்.மெய்யப்பன், பொருளாளர் கே.சோபியா, குடிநீர் வாரியம் பி.கோவிந்தராஜ், முந்திரி தொழிலாளர் சங்க நிர்வாகி ஆர் தனவேல், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க நிர்வாகி ஜி.கொளஞ்சிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.