பள்ளிபாளையதில் கட்ட்பட்ட உயர்மட்ட பாலத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

ரூ.424.38 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு - ஈரோடு சாலை மற்றும் உயர்மட்ட பாலத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்;

Update: 2025-05-29 09:44 GMT
ரூ.424.38 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு - ஈரோடு சாலை மற்றும் உயர்மட்ட பாலத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.5.2025) சென்னை, தலைமைச் செயலகத்தில் சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ரூ.424.38 கோடி மதிப்பில் நாமக்கல் மாவட்டத்தில், நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு - ஈரோடு சாலை மற்றும் இருவழித்தட உயர்மட்ட பாலம் ஆகியவற்றை காணொலிக்காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள் (ஈரோடு), திரு.வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள் (நாமக்கல்) ஆகியோர் கலந்து கொண்டனர். மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையிலும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடும் வகையிலும், உரிய காலத்தில் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். ஆட்சிப்பொறுப்பேற்ற 4 ஆண்டுகாலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி மக்கள் நலன் காத்து வருகின்றார்கள். அதன்படி, சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியோடு, நில எடுப்பு, குழாய்களை மாற்றியமைத்தல் மற்றும் பராமரிப்பு உட்பட ரூ.424.38 கோடி மதிப்பில் நாமக்கல் மாவட்டத்தில், 11.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு - ஈரோடு சாலை மற்றும் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை – இராசிபுரம் – திருச்செங்கோடு - ஈரோடு சாலையில், பள்ளிப்பாளையம் நகரின் நெரிசலை குறைத்திடும் வகையில் 3.40 கி.மீ அமைக்கப்பட்டுள்ள இருவழித்தட உயர்மட்ட பாலம் ஆகியவற்றை காணொலிக்காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவியர்கள் விரைவாக சென்று வரவும், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையிலும், இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் அருகிலுள்ள நகர்புறங்களில் அமைந்துள்ள பிற பகுதிகளுக்கு பொதுமக்கள் எளிதாக செல்லவும் இச்சாலையானது வழிவகுக்கிறது. இத்திட்டத்தில், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 7 ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்புப் பணியும் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.மூர்த்தி, கோட்டபொறியாளர் சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்டம் திரு.துரை உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News