செந்துறை அருகே நாகல் குழி கிராமத்தில் செல்வ விநாயகர். கோவில்களுக்கு கும்பாபிஷேகம்.
செந்துறை அருகே நாகல் குழி கிராமத்தில் செல்வ விநாயகர். கோவில்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்;
அரியலூர், மே.29- அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தில் அய்யனேரி கரையில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 26ஆம் தேதி கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும், தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் தினசரி நடைபெற்றது. இன்று காலை இரண்டு கால யாக பூஜை நடைபெற்ற பின்பு, யாக சாலையில் வைக்கப்பட்டு பூஜை செய்த புனித நீரையும் மற்றும் பல்வேறு புனித தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு பூஜை செய்யப்பட்ட புனித நீரும் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, மேளதாளங்கள் முழங்க மங்கல இசையுடன் ஊர்வலமாக கிராம பொதுமக்கள் முன்னிலையில் கோயில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் சிவாச்சாரர்கள் வேத மந்திரங்கள் ஓத கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாகல்குழி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகா கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர் தெய்வங்களுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்மாலைகள், புதிய ஆடைகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தெய்வங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருள் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் துணைத் தலைவர் உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் நண்பர்கள் அறக்கட்டளையினர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.