தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;
அரியலூர் மே,29 - அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சுத்தமல்லி கிராமத்தில் உள்ள எட்வர்ட் ராயர் பெட்டி கடையை ஆய்வு செய்த போது அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.பின்னர் இது குறித்து உடையார்பாளையம் போலீஸார் எட்வர்ட் ராயர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து பெட்டி கடையில் இருந்த ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ____________________________________________________________