அரியலூரில் கல்லூரி சாலையில் வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் கொலையா தற்கொலையா போலீசார் விசாரனை.
அரியலூரில் கல்லூரி சாலையில் வீட்டில் அழுகிய நிலையில் பெண் சடலம் கொலையா தற்கொலையா போலீசார் விசாரனை.செய்து வருகின்றனர்.;
அரியலூர் மே.29- அரியலூர் அரசு கலைக் கல்லூரி சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், இரண்டாவது தளத்தில் வசித்து வந்தவர் பாப்பா (44)இந்நிலையில் நேற்று காலையில் பழைய துணி வாங்க வந்த பெண் ஒருவர் பாப்பா வீட்டிற்கு சென்று பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து அரியலூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் கதவு திறந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். __________________________________________________________