ஜெயங்கொண்டம் நகராட்சி ஜேசிபி வாகனங்களை பயன்படுத்தி விதிமுறைகளை மீறி கிராவல் மண் விற்பனை ஜோர்.

ஜெயங்கொண்டம் நகராட்சி ஜேசிபி வாகனங்களை பயன்படுத்தி விதிமுறைகளை மீறி கிராவல் மண் விற்பனை ஜோராக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.*;

Update: 2025-05-29 18:52 GMT
அரியலூர், ஜூன்.1- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக பல்வேறு இடங்களில் கிராவல் மண் கொட்டப்பட்டு ஆங்காங்கே குவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை வாகனம் மற்றும் நகராட்சி ஜேசிபி வாகனத்தை பயன்படுத்தி, விதிமுறைகளை மீறி சிலர் முறைகேடாக கிராவல் மண்ணை இரவோடு இரவாக எடுத்துச் சென்று விற்பனை செய்து வருவதாகவும், இதனை தட்டி கேட்கும் சமூக ஆர்வலர்களை மிரட்டுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் நகராட்சிக்கு குப்பை அள்ளுவதற்கும் மற்றும் அரசு பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய ஜேசிபி எந்திரங்களை விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதற்கு எப்படி பயன்படுத்தலாம் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் முறைகேடாக விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Similar News