கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு

சேலம் கோட்டத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள்;

Update: 2025-05-30 03:35 GMT
அரசு போக்குவரத்துக்கழக சேலம் மண்டலம் சார்பில் முக்கிய பண்டிகை நாட்களில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதிநாட்கள் மற்றும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை சேலம் கோட்டம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப முக்கிய ஊர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், நாமக்கல், ஆத்தூர், செந்தாரப்பட்டி, ராசிபுரத்தில் இருந்து சென்னைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கும், ஈரோடு மற்றும் திருச்சியில் இந்து ஓசூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

Similar News