பெரியதச்சூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த நபர் கைது
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை;
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அருகே உள்ள,பெரியதச்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் நேற்று ரெட்டணை பகுதியில் உள்ள நாராயணன், 33, என்பவரது பங்க் கடையில் ஆய்வு செய்த போது அரசால் தடை செயயப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.போலீசார் அவரது கடையிலிருந்து 150 குட்கா பாக்கட்டுகளை பறிமுதல் செய்து, நாராயணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.