ஆவடி குடியிருப்பு வாசலில் ஆபத்தான வகையில் மின்கம்பங்கள் பொதுமக்கள் பீதி.

ஆவடி குடியிருப்பு வாசலில் ஆபத்தான வகையில் மின்கம்பங்கள் பொதுமக்கள் பீதி.;

Update: 2025-05-30 05:11 GMT
ஆவடி மாநகராட்சிகுட்பட்ட 20வது வார்டு தென்றல் தகரில் 40 துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. ஆயிரத்திர்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் தென்றல்நகர் முதல் பிரதான சாலை. 4வது பிரதான சாலை. மற்றும் முதல் தெரு, 4 வது குறுக்கு தெரு, 10வது தெரு போன்ற பல தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் சிமெண்ட் பூச்சுக்கள் முழுவதும் உதிர்ந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி வாழ் பெண்கள் கூறும்போது வீட்டு வாசலில் உள்ள இந்த ஆபத்தான மின்கம்பங்களால் எந்த நேரம் முறிந்து விழுமோ என்ற நிலையில் நாங்கள் வீட்டை வீட்டு வெளியே வர பயமாக உள்ளது. குழந்தைகள் கூட வீட்டு அருகில் தெருவில் விளையாட முடியாத நிலை உள்ளது. மேலும் சிறிய காற்று வீசினால்கூட முறிந்து விழும் நிலையில் உள்ளது இது குறித்து சேக்காடு மின்சார வாரிய அலுவலத்தில் புகார் செய்தால் அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுவிடுகின்றனர். சிதிலடைந்த மின்கம்பங்களால் உயிர்பலி ஏற்படும் முன் ஆபத்தான மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மின்சாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அடிக்கடி இரவில் மின்தடை ஏற்படுவதாகவும் உடைந்த மின்கம்பங்களில் ஏறி ஊழியர்கள் பழுதுநீக்கமுடியாமலும் தெருவிளக்குகள் பொருத்தமுடியாம மல் பல தெருக்கள் இருழில் மூழ்கி கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

Similar News