அரகண்டநல்லூரில் வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்கிய அமைச்சர்
முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்;
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், மணம்பூண்டி ஊராட்சியில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், பெஞ்சல் புயல் பாதிப்பால் சேதமடைந்த வியாபாரிகளின் விளைபொருட்களுக்கு மாண்புமிகு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி முன்னிலையில் இழப்பீட்டுத்தொகையினை இன்று (30.05.2025) வழங்கினார். உடன் ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் திரு.டி.ஆப்ரஹாம்,இ.ஆ.ப., திருக்கோவிலூர் நகர்மன்ற தலைவர் திரு.முருகன், முகையூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி.தனலட்சுமி உமேஷ்வரன், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.எஸ்.அன்பு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் .எஸ்.ஈஸ்வர், துணை இயக்குநர், வேளாண் வணிகம் பூ.சுமதி உட்பட பலர் உடனிருதனர்.