அரியலூரில் விழி பிதுங்க வைக்கும் நகைக்கடன் விதிகளை வாபஸ் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாதா கோயில் முன்பு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன் கட்டுப்பாடுகளை உடனே வாபஸ் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .;
அரியலூர், மே.30- அரியலூர் மாதா கோவில் முன்பு மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் விவசாயம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர் இந்நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கிகளில் பெறக்கூடிய நகைக்கடன்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் உள்ளதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள நகை கடன் கட்டுப்பாடுகளை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் நகைக்கடன் வழங்குவதில் பழைய நடைமுறைகள் தொடர உத்தரவிட வேண்டும் என கோஷசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் , மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, வி.பரமசிவம், துரை அருணன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதகிருஷ்ணன், ஆண்டிமடம் வட்டத் செயலாளர் வேல்முருகன், சந்தானம், மூத்த நிர்வாகி சிற்றம்பலம், திருமானூர் ஒன்றிய எஸ்.பி.சாமிதுரை, மாவட்டக்குழு பி.பத்மாவதி, ஆர்.ரவீந்திரன், அழகுதுரை, மலர்கொடி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். .