மாநிலங்களவை உறுப்பினருக்கு மக்கள் நீதி மையம் தலைவரை பரிந்துரை செய்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
குமாரபாளையம் மக்கள் நீதி மைய ஆலோசனை கூட்டத்தில் தலைவர் கமலஹாசனை மாநிலத்தை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரை செய்ததற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்;
சேலம் மண்டலம் குமாரபாளையம் ம.நீ.ம. மாவட்டம் குமாரபாளையம் நகர மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனை கூட்டம் 29-05-2025 அன்று ரெயின்போ டிஜிட்டலில் மாவட்ட பொருளாளர் .ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கான ஏற்பாட்டினை நகர செயலாளர் .மனோகரன் செய்திருந்தார் சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் காமராஜ் கலந்து கொண்டார் ஜூன் 5.ல் வெளியாகும் தக்லைப் படத்தின் விழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் இந்தியா கூட்டணி தி.மு.கழகம் மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரை செய்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் . நகரச் செயலாளர் மனோகரன் நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ் குப்பாண்டபாளையம் பஞ்சாயத்து செயலாளர் அன்பழகன் வார்டு செயலாளர் காளான் தனசேகரன்,சிவராஜ், சுந்தரபெருமாள், சண்முகசுந்தரம், முரளிதரன், தங்கராஜ், முரளி,பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்