மறைந்த முன்னாள் மாதர் சங்க மாநில தலைவர் மைதிலி சிவராமனுக்கு மாதர் சங்கத்தினர் வீரவணக்கம்.

அரியலூரில் மறைந்த முன்னாள் மாதர் சங்க மாநில தலைவர் மைதிலி சிவராமனுக்கு மாதர் சங்கத்தினர் வீரவணக்கம் செலுத்தப்பட்டது;

Update: 2025-05-30 12:22 GMT
அரியலூர், மே. 30- .அரியலூர் மாதா கோயில் பஸ் ஸ்டாப் அருகில் மறைந்த முன்னாள் மாதர் சங்க மாநில தலைவர் மைதிலி சிவராமனுக்கு மாதர் சங்கம் சார்பில் மாதர் சங்க மாவட்ட தலைவர் பி பத்மாவதி தலைமையில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாவட்ட பொருளாளர் மலர்கொடி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தனலட்சுமி, மாதர் சங்க நிர்வாகிகள் சூரியகலா, துர்கா,  கனிமொழி, செந்தொண்டர்கள் ரசிகா தன்சிகா, விஸ்வஜித் மற்றும் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர் மணிவேல், அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். :-

Similar News