பழைய இரும்புக்கடை குடோனில் தீவிபத்து

பழைய இரும்புக்கடை குடோனில் தீவிபத்து பல லட்சம் பொருட்கள் சேதம் ஆகின.;

Update: 2025-05-30 12:42 GMT
அரியலூர், மே.30- அரியலூர் ஆயிரங்கால் மண்டபத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக்கேயன்(51). இவர், அப்பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கொள்முதல் கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும், இவர் அப்பகுதியில் குடோன் ஒன்றை வைத்து அதில் பழைய வயர், பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை சேகரித்து வைத்தும், கூடுதல் விலை கிடைக்கும் பட்சத்தில் அதனை விற்பனை செய்தும் வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை குடேனிலிருந்து கரும்புகை வந்துள்ளது. இதை அப்பகுதி மக்கள் கண்டு, காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், குடோனில் இருந்த சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் எரிந்து சாம்பலாகின. விபத்து குறித்து அரியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News