ஒன்பது வருடமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த கொலை குற்றவாளி கைது

ஒன்பது வருடம் தலைமறைவான கொலை குற்றவாளியை கொக்கி போட்டு பிடித்த காவல் உதவி ஆணையாளர்.;

Update: 2025-05-30 13:46 GMT
ஒன்பது வருடம் தலைமறைவான கொலை குற்றவாளியை கொக்கி போட்டு பிடித்த காவல் உதவி ஆணையாளர். செங்குன்றம் அடுத்த சோழவரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு முத்து பிரகாசம் என்ற ரவுடியை , தண்டையார்பேட்டை கருணாநிதி நாலாவது தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சுபாஷ் என்ற சின்னையா என்பவர் வெட்டி கொலை செய்தார் . இந்த வழக்கில் சோழவரம் போலீசார் சுபாஷை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பிணையில் வெளியே வந்த அவர் கடந்த ஒன்பது வருடமாக விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதற்கிடையில் நீதிமன்றம் அவரை பிடிக்க பிடியானை பிறப்பித்தது. இதனால் ஆவடி ஆணையரக கமிஷனர் உத்தரவின் பேரில் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாலாஜி ஆலோசனைகள் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையாளர் ராஜா ராபர்ட் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், தண்டையார்பேட்டை ஐஓசி அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் படி, அங்கு சென்ற தனிப்படை போலீசார் நேற்று இரவு துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதுகுறித்து சோழவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிளாஸ் சன் டேவிட் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். ஒன்பது வருடமாக போலீசுக்கு டிமிக்கு காட்டிய கொலை குற்றவாளி சுபாஷ் என்ற சின்னவை விரைந்து பிடித்த செங்குன்றம் சரக உதவி ஆணையாளர் தனிப்படை போலீசாரை போலீஸ் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News