குடி போதையில் தற்கொலை செய்து கொண்ட சுமை தூக்கும் தொழிலாளி
குமாரபாளையம் அருகே குடி போதையில் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
குமாரபாளையம் அருகே ஒட்டன்கோவில் பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன், 37. மொடக்குறிச்சி சர்க்கரை ஆலையில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் மாலை, தான் குடியிருக்கும் பகுதியில் உள்ள தன் அம்மா வீட்டில், மாலை 03:00 மணியளவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இவரது மனைவி சத்தியா, 33, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.