ஜெயங்கொண்டம் அருகே இளம் பெண் மாயம்: தங்கையை கண்டுபிடித்து தர கோரி சகோதரி போலீசில் புகார்.
ஜெயங்கொண்டம் அருகே சகோதரியை கண்டுபிடித்து தர கோரி சகோதரி அளித்த புகாரின் பேரில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்.;
அரியலூர் மே 30- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி அம்பலக்கார தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் கலைவாணி (28) இவர் திருமணமாகாமல் தனது தாயுடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி ஜெயங்கொண்டதிற்கு சென்று விட்டு வருவதாக கூறிச் சென்ற கலைவாணி இது நாள் வரை வீடு திரும்ப வில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் சகோதரி இளவரசியும் சேர்ந்து கலைவாணியை அவரது தோழிகளின் வீடு உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கலைவாணியின் சகோதரி இளவரசி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன இளம் பெண் கலைவாணியை தேடி விசாரித்து வருகின்றனர்.