இளம் பெண் மாயம் தாய் போலீசில் புகார்

குமாரபாளையம் அருகே இளம் பெண் மாயமானதால், அவரது தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.;

Update: 2025-05-30 14:43 GMT
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் தனுசா, 18. பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர், இவரது ஊரின் அருகே உள்ள ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் அருண்குமாரை 5 வருடமாக காதலித்து வருவதாக தெரிகிறது. இதுபற்றி, தனுசா வசம் அவரது தாய் அமுதா, 39, பலமுறை கண்டித்துள்ளார். மே. 25, காலை, தாயும், பெரிய மகளும் வேலைக்கு சென்று விட்டு, மாலை வீடு திரும்பிய போது, இளைய மகள் தனுசாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அமுதா, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி குமாரபாளையம் போலீசார், காணாமல் போன தனுசாவை தேடி வருகின்றனர்.

Similar News