ராயக்கோட்டை: கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம்
ராயக்கோட்டை: கோதண்டராமசாமி கோவில் கும்பாபிஷேகம்;
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே குந்துமாரணப்பள்ளி பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சஞ்சீவராயசாமி, கோதண்டராமசாமி மற்றும் சீதா தேவி, லக்குமணர், அனுமார் ஆகியோருடன் தனி சன்னதி, புதியதாக புரனரமைக்கபட்டு பிரதிஷ்டை செய்து நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்து ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழுங்க புனிதநீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்.