கிருஷ்ணகிரி திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி.
கிருஷ்ணகிரி திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி.;
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சென்னை சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த மகோத்சவ திருவிழாவில் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் முன்பு 30 அடி நீள துரியோதனன் உருவ பொம்மை மண்ணால் செய்யப்பட்டிருந்தது. அதில் பீமனும், துரியோதனனும் சண்டையிட்டு, இறுதியில் பீமன் தன் கதாயுதத்தால், துரியோதனின் தொடையில் அடித்து வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருநங்கையின் கையால், ஆண்களும், பெண்களும் துடைப்பத்தில் அடிவாங்கி தங்கள்ளின் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.