கிருஷ்ணகிரி டூவீலர் கார் மோதி பெண் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி டூவீலர் கார் மோதி பெண் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி அடுத்துள்ள பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி சாந்தி. நேற்று லிப்ட் கேட்டு டூவீலரில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சென்ற போது அவ்வழியாக வந்த கார் டயர் வெடித்து எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது மோதியது. படு காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.