நாமக்கல், கோவைக்கு அரசு பேருந்துகள் விட கோரிக்கை
குமாரபாளையத்தில் இருந்து நாமக்கல் மற்றும் கோயம்புத்தூருக்கு அரசு பேருந்துகள் விட கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குமாரபாளையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு செல்வதென்றால் பவானி லட்சுமிநகர் அல்லது ஈரோடு சென்று கோவைக்கு செல்ல வேண்டி உள்ளது. அதேபோல் நாமக்கல் செல்ல வேண்டும் என்றால் பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு செல்ல வேண்டும் குமாரபாளையம் பகுதியில் ஹேண்ட் லூம் மற்றும் பவர்லூம் ஜவுளி உற்பத்தி அதிகம் என்பதால் கோவை வியாபாரிகள் மற்றும் வடமாநில வியாபாரிகள் குமாரபாளையம் வரவும், தொழில் வளம் பெருகவும் உதவியாக இருக்கும். அவசர சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு மற்றும் அவசர தேவைக்கு செல்ல வேண்டுமென்றால் பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி குமாரபாளையத்திலிருந்து கோவை மற்றும் நாமக்கல் செல்வதற்கு அரசு பேருந்துகள் விடக்கோரி, போக்குவரத்துத்துறை அமைச்சர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், மற்றும் பொது மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம், ஆகியோருக்கு மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பாக கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.