டிவைடர் தாண்டி பறந்து வந்து டூவீலர் மீது பாய்ந்த கார் மூன்று பேர் படுகாயம்
குமாரபாளையம் அருகே டிவைடர் தாண்டி பறந்து வந்து டூவீலர் மீது பாய்ந்த காரால் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, மகநூத்தப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி,39, கடலூர் மாவட்டம், புதிய வனப்பாலம் பகுதியை சேர்ந்த அன்பரசன், 37, ஆகிய இருவரும், பொக்லின் வாங்குவதற்காக, அந்தியூர் சென்று விட்டு, மே, 26, இரவு 07:00 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம், கிணத்துபாளையம் மாரியம்மன் கோவில் எதிரில், அன்பரசனுக்கு சொந்தமான யமஹா டூவீலர் வாகனத்தில், அன்பரசன் ஓட்ட, ராஜீவ் காந்தி பின்னால் உட்கார்ந்து வந்தார். அப்போது, சாலையின் மறுபக்கம் வந்து கொண்டிருந்த, ஹுண்டாய் கார், டிவைடர் தாண்டி பறந்து வந்து, இவர்கள் வந்த டூவீலர் மீது விழுந்தது. இதில் டூவீலரில் வந்த இருவர் படுகாயமடைந்தனர். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான, கார் ஓட்டுனர், சேலத்தை சேர்ந்த மின்வாரிய அலுவலர் ஷாருக்கான், 24, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இவரும் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.