தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது;
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளர் உத்தரவுப்படி மணிநகரம் மற்றும் சண்முகநாதபுரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு உலர் கழிவுகள் மற்றும் ஈரக் கழிவுகளை தூய்மை பணியாளரிடம் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கழிவுகளை எவ்வாறு பிரித்து வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகள் இணைந்து தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்றனர். இதில் துப்புரவு மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்