ராமநாதபுரம் பெற்றோர்கள் சாலை மறியல்

நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு திடீரென இன்று மேல் வகுப்பு படிப்பதற்கு இடமில்லை எனக் கூறியதால் பெற்றோர் மாணவர்கள் அதிர்ச்சி;

Update: 2025-06-03 08:41 GMT
ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு திடீரென இன்று மேல் வகுப்பு படிப்பதற்கு இடமில்லை எனக் கூறியதால் பெற்றோர் மாணவர்கள் அதிர்ச்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்புராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இதில் பத்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியும் 11மற்றும்12 வகுப்புகள் தமிழ் வழிக் கல்வியும் இருந்து வருவதாக தெரிகிறது இந்த நிலையில் பத்தாம் வகுப்பு வரை பயின்ற ஒரு சில மாணவிகளை 11 மற்றும் 12 வகுப்புகளில் சேர்க்க இயலாது என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கூறியதாக கூறப்படுகிறது இதனால் கடைசி நேரத்தில் இன்று கூறியதால் திடீரென எந்த பள்ளியில் சேர்ப்பது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்து புலம்பிய பெற்றோர் மற்றும் மாணவிகள் பள்ளிக்கு சென்று அங்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து மாணவிகளின் பெற்றோர் தெரிவிக்கும் பொழுது ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை இதே பள்ளியில் பயின்ற எமது பிள்ளைகள் 11 மற்றும் 12 வகுப்புகள் எங்கு கொண்டு சேர்ப்பது என தெரியாமல் இருப்பதாகவும் கடைசி நேரத்தில் இவ்வாறு கூறியது அதிர்ச்சி அளிப்பதாகவும் ஆகவே தங்களது பிள்ளைகளை இங்கேயே படிப்பதற்கு உண்டான வழிவகை ஏற்படுத்தி தர வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவிக்கும்போது கட்டிட வசதிகள் குறைவாக இருந்ததனாலும் தற்போது அதன் எதிரே உள்ள நடுநிலைப் பள்ளியில் கட்டிடங்கள் கட்டப்பட்டு 90% பணிகள் முடிவுற்றதாகவும் உடனடியாக இந்த மாணவர்களே இதே பள்ளியில் சேர்ப்பதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்...

Similar News