ராமநாதபுரம் வாகன விபத்து
திருவாடனை அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது;
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கொச்சி தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகர் பகுதியில் கேரளாவில் மீன் லோடு இறக்கிவிட்டு நாகப்பட்டினத்திற்கு திரும்பி வரும் போது ஈச்சர் வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதுஇதில் நாகப்பட்டினத்தை சிவானந்தம் (45) ஓட்டுநர் சிக்கி கொண்டார். உடன் அருகில் இருந்தவர்கள் திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் முருகானந்தம் (போக்குவரத்து) பொறுப்பு தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரத்திற்கு மேலாக போராடி ஓட்டுனரை பத்திரமாக மீட்டனர் காலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து திருவாடானை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.